December 8, 2025, 2:09 PM
28.2 C
Chennai

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.  நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களது திருமண புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை நடைபெறுவதற்கு முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஒரு மெசேஜ் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில், கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்துள்ளது. அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள் நல்ல தருணங்களில் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றியது.

இன்று முதல் என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே, இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகம் கொள்கிறேன். எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன்பு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று விக்னேஷ்சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவை படித்து நயன்தாரா  மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் உட்பட பலரும் நெகிழ்ந்து போனார்களாம்

IMG 20220609 195247 - 2025
IMG 20220609 195408 - 2025
IMG 20220609 164500 378 - 2025
IMG 20220609 195902 - 2025
IMG 20220609 195821 - 2025
IMG 20220609 195623 - 2025
IMG 20220609 151740 - 2025
NTLRG 20220609160241891259 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories