சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்

Published:

siva14 - 2026

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் விஞ்ஞான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘ஸ்பைடர், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் ‘NGK’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், நீரவ்ஷா ஒளிப்பதிவும் செய்யவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img