இயக்குனர் அட்லி, நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி இரண்டையும் வெற்றிப்படமாக்கியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது
ஆனால் ‘மெர்சல்’ படத்தில் ஏற்பட்ட ஒருசில மனக்கசப்பு காரணமாக மீண்டும் அட்லிக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பெரிய பட நிறுவனத்தையே முடக்கிய அட்லீக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற குரலும் எழுந்தது
இந்த நிலையில் அட்லீ தனது அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பிரபாஸ், அல்லு அர்ஜூன் அல்லது பவன்கல்யாண் ஆகியோர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பழைய படங்களை காப்பி அடிப்பவர் என்ற பெயரை எடுத்த அட்லிக்கு தெலுங்கு மாஸ் நடிகர்கள் வாய்ப்பு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்



