இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா இணையும் படம் என்றாலே ஆக்சன் படம் தான் என்பதை ரசிகர்கள் முடிவு செய்துவிடுவார்கள். அதனை நிரூபிப்பதுபோல்தான் ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்களும் இருந்தது
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்வை ஆக்சனில் இருந்து விடுதலை செய்து குடும்ப செண்டிமெண்ட்டுக்கு மாற்ற ஹரி முடிவு செய்துள்ளாராம்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா காதல் மற்றும் காமெடி படங்களில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஹரி தற்போது இயக்கி வரும் சாமி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரும், அதேபோல் சூர்யாவும் ‘NGK’ என்ற படத்தில் நடித்து முடித்த பின்னரும் இந்த படம் தொடங்கப்படும் என தெரிகிறது.