சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் சென்சார் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோலிவுட் திரையுலகில் ஸ்டிரைக் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே தியேட்டர் புக்கிங் உள்பட இன்னும் எந்த பணியும் தொடங்கவில்லை
ஆனால் ஒரு விஷயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுதான் டிஜிட்டல் நிறுவனங்களிடம் ‘காலா’ படத்தின் இடையில் ஒளிபரப்பும் விளம்பரத்திற்கான புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலா படத்தின் ஆரம்பத்தில் மற்றும் இடைவேளையில் விளம்பரம் ஒளிபரப்ப கோடிக்கணக்கில் முதலீடு செய்ய பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாம். இந்த தொகை படத்தின் விற்பனையை காட்டிலும் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது