தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமைய்யா.இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். இவர் மகன் உமாபதி.
அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறாததால் மகனை வைத்து மன்னார் குடும்பம் என்ற படத்தை தானே இயக்கி தயாரித்தார் தம்பிராமய்யா. அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது.
கடைசியாக சேரன் இயக்கிய திருமணம் படத்தில் நடித்தார், அதுவும் உமாபதியின் திரை பயணத்தில் உதவவில்லை.இந்நிலையில் உமாபதி தண்ணி வண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தம்பி ராமய்யா உமாபதியின் தந்தையாகவே நடிக்கிறார். இப்படத்திம் ஹீரோயின் வில் அம்பு படத்தில் நடித்த சம்ஸ்கிருதி.
இவர்கள் தவிர தேவதர்ஷினி, பால சரவணன், மனோஜ் குமார் வித்யூலேகா ராமன்,சேரன்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோசஸ் இசை அமைக்கிறார். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். மாணிக்க வித்யா இயக்குகிறார்
அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார்.மற்றப்படி இன்று நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கும், படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என இப்படத்தைப் பற்றி கூறுகிறார்.
இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை என்றார்.



