பிரான்ஸ் நாட்டில் சென்ற புதன்கிழமை இரவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி ஒன்றேகால் வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
டர்ன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. இங்குள்ள குறையுள்ஹெட் எனும் சிறு நகரில் 7.00 மணியளவில், தனியார் நீச்சல் குளம் ஒன்றுக்குள் குழந்தை விழுந்து பலியாகியுள்ளது.
பெற்றோர்களுடன் இருந்த குழந்தை பெற்றோர்கள் கண்காணிப்பில் இருந்து விலகி நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது. சில நிமிடங்கள் கழித்த பின்னரே குழந்தை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தை தண்ணீருக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக குழந்தையை மீட்டதோடு, முதலுதவியும் செய்துள்ளனர். ஆனால் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.



