செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் முருக பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்த கோவிலில் கடந்த ஜீன் 14ம் தேதியில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. அதனையொட்டி 41நாட்கள் மண்டல பூஜைகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினமாக உள்ளதாலும், மேலும் சஷ;டி திருநாளாகவும் இருப்பதால் இன்று அதிகாலை முதல் அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



