
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் மன்மோகன்சிங் கேரக்டரில் அனுபம்கெர் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது சோனியா காந்தி கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த சூசன் பெர்னெர்ட் என்ற நடிகைதான் சோனியா காந்தி கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.
சூசன் பெர்னெர்ட் அவர்களின் கணவர் இந்தியர் என்பதும் சூசன் பெர்னெர்ட் ஒருசில இந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



