நடிகை, நடனப்பயிற்சி இயக்குனர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளரான காயத்ரி ரகுராம் திடீரென கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…
நான் கைது செய்யப்பட்டதாக தவறான வதந்தி பரவி இருக்கிறது. கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் பா.ஜனதா கட்சியில் இருக்கும் காரணத்தால் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள்.
எனக்கு குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை பற்றிய தவறான வதந்தி அவர்களையும் காயப்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்யவிடாது. மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நானும் நம்பிக்கையை இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த விளக்கத்தை அடுத்து காயத்ரி மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
— Gayathri Raguramm (@gayathriraguram) April 16, 2018