கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் யார்? என்ற விபரம் தற்போது கசிந்துள்ளது.
விஷால் நடித்த திமிரு, மலையாளத்தில் ‘களி’, ‘கம்மட்டி பாடம்’ மற்றும் தனுஷின் ‘மரியான்’ உள்பட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் விநாயகன் தான் ‘துருவ நட்சத்திரம் படத்தின் வில்லன் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர் இந்த படத்தில் மிரட்டியுள்ளதாகவும் இந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் பிசியான வில்லனாக வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படத்தில் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்



