சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் நியமனம் செய்த திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்த பின்னர்தான் பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் சமீபத்தில் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மறுத்த நடிகர் விஷால், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு முடிவு செய்யும் என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்றிரவு திரைப்பட ஒழுங்குபடுத்தும் குழு தலைவர் ‘இரும்புத்திரை’ திரைப்படம் மே 11ஆம் தேதி வெளியாக அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது உறுதியாகியுள்ளது.
விஷால் , சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பி.எஸ்,மித்ரன் இயக்கியுள்ளார்