சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 67 வயது ஆகிவிட்டாலும் அவருடைய ஸ்டைலுக்கு மட்டும் இன்னும் வயதாகவே இல்லை. அவ்வப்போது வெளிவரும் ரஜினியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் ரஜினியின் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏறபடுத்திய நிலையில் இன்று மேலும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ரஜினிகாந்த் கோட், சூட் அணிந்து ஸ்டைலாக நிற்கின்றார். இந்த போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 67 வயதிலும் இவ்வளவு ஸ்டலா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.