ஜோதிகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

சினி நியூஸ் சினிமா
jyothika rajini - 2026ஜோதிகா நடிக்கவுள்ள ரிமேக் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மோகன்லால்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையா மஞ்சுவாரியர் நடித்திருப்பார். ஒரு நடிகனுக்கு தீவிர ரசிகையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை குடும்பப் பின்னணியில் சொன்ன படம்தான் மோகன்லால். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தை ஜோதிகாவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘ரஜினி செல்வி’ என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி ஒரே ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் விரைவில் உறுதி செய்வார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே ஜோதிகா, ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.