சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பது தெரிந்ததே. ரஜினிக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவரது கேரக்டர் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிவ் வரும் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathy is a very good superior actor.