சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமார் மகனுமான சிவாஜிதேவ் என்பவரை பிக்பாஸ் புகழ் சுஜா வருணே விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சுஜா. இவர் தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்திருக்கும் நிலையில் சிவாஜி பேரனும் நடிகருமான சிவாஜிதேவ்வை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது
சமீபத்தில் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படத்தை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்,. சிங்கக்குட்டி உள்பட ஒருசில படங்களில் மட்டும் நடித்துள்ள சிவாஜிதேவ், விரைவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.




இநà¯à®¤à®®à®¾à®¤à®¿à®°à®¿à®¯à®¾à®© செயà¯à®¤à®¿à®•ளை விரà¯à®®à¯à®ªà¯à®µà®°à¯à®•ளà¯à®®à¯ இரà¯à®•à¯à®•தà¯à®¤à®¾à®©à¯ செயà¯à®•ிறாரà¯à®•ளà¯.