நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘மகாநதி ‘ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்திசுரேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன், கீர்த்திசுரேஷை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீர்த்திசுரேஷ் தனது டுவிட்டரில், ”கமல்ஹாசன் அவர்களிடம் பாராட்டும், ஆசிர்வாதமும் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். அவருக்கு எனது நன்றிகள் என்று பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன், சாவித்திரி, கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம்