பாபிசிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

சினி நியூஸ் சினிமா

agnidevi - 2026

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் என்ற தேசிய விருதை பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது

இந்த நிலையில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘அக்னிதேவ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு நேற்று பூஜையும் போடப்பட்டாது. சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

agnidev - 2026ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் ஒரு நாயகியாக கல்லூரி மாணவி ஒருவர் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.