நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ், ஞானவேல்ராஜா, நடிகர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் எம்.ராஜேஷ் இணையவுள்ள இந்த படத்தில் காமெடிக்கு கேரண்டி என்று கூறலாம்.
இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது
இந்த விழாவில் ஞானவேல்ராஜா பேசியதாவது: ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.