
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா; திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களும் ஃபேஸ்புக், டுவிட்டர் பயனாளிகளும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் படம் சூப்பர் ஹிட் என்று கூறப்படுகிறது
சென்னை உள்பட முக்கிய திரையரங்குகளில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணீக்கு தொடங்கிய முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தில் அரசியல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
ரஜினியின் நடிப்பு, திரைக்கதை, நடிகர்-நடிகையர் தேர்வு, கூர்மையான வசனங்கள், புரட்சிகரமான கருத்துக்கள் இந்த படத்தின் ப்ளஸ்களாகவும், படத்தின் நீளம், ஓவர்டோஸ் போராட்டங்கள், மெதுவாக நகரும் இரண்டாம் பாதி திரைக்கதை ஆகியவை நெகட்டிவ்களாகவும் இந்த படத்திற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

