நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தெரிந்ததே. இருவரும் ஒன்றாக அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா என்ற படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன். நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடல் காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கும் என்றும் இந்த பாடல் ரசிகர்களை அதிகளவில் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இதே படத்திற்காக ‘கல்யாண வயசு’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதினார் என்பதும் இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது என்பதும் தெரிந்ததே.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.