மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச்: போட்டு உடைத்த நடிகை ஹனிரோஸ்

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

Honey Rose actress kerala - 2026

திரை உலகில் அண்மைக் காலமாக பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தை காஸ்டிங் கவுச். இந்த ஒற்றை வார்த்தை இப்போது இந்தியத் திரை உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, உடலியல் ரீதியான தேவைகளுக்கு அழைக்கும் சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்தியத் திரை உலகை இப்படி தனது புகார்களால் திரும்பிப் பார்க்க வைத்து, டோலிவுட் வட்டாரத்தையே கதறக் கதற அழவைத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிடுவாரோ என்று எண்ணுமளவுக்கு, மலையாள நடிகை ஹனிரோஸும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என அவர் போட்டுள்ள குண்டு, பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்த நிலையை அடையும் வரை இந்த காஸ்டிங் கவுச்சின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இம்மாதிரி நேரங்களில் நம்மை மூளைச்சலவை செய்யும் வேலைகூட நடக்கும். நல்ல வேளை எனக்கு என் பெற்றோர்கள் எப்போதும் துணையாக இருந்தனர். அதனால் இதுபோன்ற சங்கடங்களில் நான் சிக்கிக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கலைத்துறையை தூக்கிப் பிடிக்கும் சினிமா உலகம் என்று பேர் பெற்ற மலையாளத் திரையுலகிலும் இது போன்ற சங்கடங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.