வரும் 2019, புதிய கலர் ஸ்கீமில் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்குகள் டைட்டானியம் கிரே கலரில், ரெட் வீல் ரிம் மற்றும் பிரேம்களுடன் வெளியாகும்.
புதிய கலர் ஸ்கீம், அழகிய வடிவில் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலுடன் ஆகியவைகளை உள்ளடக்கியது. இந்த கலர் ஸ்கீம் டுகாட்டியின் சில சிறந்த ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் இடம் பெற்ற கலர்களில் இருந்து ஒருமுகப்படுத்தப்பட்டதேயாகும். டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட், பராம்பரியமான டுகாட்டி ரெட் கலரில் இதுவரை வெளியாகவில்லை.
புதிய டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் யின் பின்புற சீட் கவர் டைட்டானியம் கிரே கலர் மற்றும் அதே கலர் காம்பினேஷனிலும் கிடைக்கிறது.
டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் S பைக்கில், Ohlins சஸ்பென்ஷன், டுகாட்டி க்யூக் ஷிப்ட்டர் மற்றும் ரீயர் சீட் கவர் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. மேலும், டுகாட்டி ரெட் கலரிலும், ஸ்டார் ஒயிட் சில்க் கலருடன் ரெட் வீல் மற்றும் பிரேம் ஆகியவற்றுடன் வெளியாகும். வரும் ஜூலை மாதம் முதல் இந்த பைக்குள் புதிய கலர் ஸ்கீமில் டீலர்களிடம் கிடைக்கும் என்று டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த புதிய கலர் ஸ்கீமில் அறிமுகமாகுமா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.



