சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
சேலம் – சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர் பசுமை வழிச்சாலைக்காக மலைகள் எதுவும் சேதப்படுத்தப்படாது.
பசுமை வழிச்சாலையால் பயண நேரம் குறைவதோடு, ஆண்டுக்கு 6 கோடி லிட்டர் டீசல் செலவு மிச்சமாகும்.
டீசல் பயன்பாடு குறைவதால் காற்றில் கலக்கும் கோடிக்கணக்கான கிலோ மாசு குறையும்.
பசுமை வழிச்சாலையால், தூரம் குறைவதால், ஒரு மூட்டைக்கு ஐந்து பைசா குறையும்.
முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கிய பின்னரே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்.
பசுமை வழிச்சாலைக்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்.
கட்டிடம், வீடு அல்லது வியாபார கட்டிடமாக இருக்குமானால் சதுர அடிக்கு ரூ.2000 இழப்பீடு வழங்கப்படும்.
நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சமோ (அ) பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடோ வழங்கப்படும்.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மாற்று இடங்கள் கொடுக்கப்பட்ட பின்னர் தான் நிலம் கையகப்படுத்தப்படும்.
நிலத்திலுள்ள மரங்கள், கட்டிடங்கள், கிணறு போன்றவற்றிற்கு தனித்தனியே இழப்பீடு வழங்கப்படும்.
சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருமருங்கிலும் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
கட்டிடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப்படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும்.
வெட்டப்படும் மரங்களுக்கு பதில் சாலையின் இருமருங்கிலும் 10 மீட்டர் அகலகத்திற்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
பசுமை வழி விரைவுச்சாலையை மேம்பாலம் மூலம் அமைக்க கிலோ மீட்டருக்கு ரூ.140 கோடி வரை செலவாகும்.
செலவினங்களை குறைக்க ரூ.15 கோடி செலவில் தரை மார்க்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.



