அரசுத் திட்டங்களை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு!

சினி நியூஸ் சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்
ar murugadoss - 2026

சென்னை: சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜய் நடித்த சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பலர் இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெருக்குதல் எழுந்த நிலையில், இயக்குனர் முருகதாஸ் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவின் கீழ் முருகதாஸ் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.