கொஞ்சம் அவகாசம் கொடுத்தாலும் மிச்சமிருக்கற சிலைங்களையும் கடத்திடுவீங்களே! ‘குட்டு’ வைத்த நீதிமன்றம்!

Published:

Madras High Court in Chennai - 2026

சென்னை: கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்ட 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது என்றும்,  2021 ஆம் ஆண்டு வரை அவகாசம் தந்தால் எஞ்சியுள்ள சிலைகளும் திருடப்படும் என்றும், காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றி அறிக்கை வேண்டும் என்றும் சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அரசுக்கு ‘குட்டு’ வைத்தார்.

சிலைக் கடத்தல் வழக்கில், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், கோயில்களில் 3,000 பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டியுள்ளது. 2021க்குள் பாதுகாப்பு அறை அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது. 100 அடி கொண்ட பாதுகாப்பு அறை அமைக்க 2021 வரை அவகாசம் தேவையா? நீண்ட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டால், சிலை கடத்தப்படுவது தொடரும். பாதுகாப்பு அறை அமைப்பதில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இது தொடர்ந்தால் தலைமைச் செயலரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் என்று கூறி, இந்த வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img