ரஜினி போகும் ட்ராக் … தோல்வியே அடைந்துள்ளது!

Published:

petta rajini - 2026

அண்மைக் காலமாக ரஜினி போகும் ட்ராக் அவருக்கு மட்டும்மல்ல, அவரை நம்பியுள்ல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கூட தோல்வியையே தந்துள்ளது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இரண்டுமே வசூல் வேட்டையில் ஈடுபட்டாலும், கடந்த கால ரஜினி பட வசூல் அண்மைக்கால படங்களுக்கு இல்லை என்கிறார்கள்.

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுக்கிடையே வசூலில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தில் பேட்ட படம் அதிக வசூல் செய்திருந்தாலும், உலகளவில் ஒட்டுமொத்தமாக விஸ்வாசம் அதிக வசூலை பெற்றதாக கூறப்படுகிறது.

பேட்ட திரைப்படம் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் சாதனை படைத்திருந்தாலும், தெலுங்கில் இந்த படம் தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் 14 கோடிக்கு விற்பனையான இந்த படம் 6 கோடியை மட்டும் வசூல் செய்துள்ளது. இதனை வருத்தத்துடன் கூறியுள்ளனர் தெலுங்கு பட விநியோகஸ்தர்கள்

இதனால் தெலுங்கு உரிமை வாங்கிய விநியோகஸ்தர்கள் கவலையில் உள்ளனர். மேலும், அண்மைக் காலமாக ரஜினியின் பழைய ஜனரஞ்சக வாசனை படங்களில் இல்லை என்றும், அரசியல் கருத்துக்களுடன் ஒரு தரப்பு மக்களை மட்டுமே கருத்திக் கொண்டு முன்பின் தெரியாத இயக்குனர்களின் படங்களில் எல்லாம் ரஜினி நடிப்பது அவருக்கு மட்டுமல்ல, அவரை நம்பி இருக்கும் அனைவருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

காலா, 2.0 படங்களைத் தொடர்ந்து ‘பேட்ட’ படமும் தோல்வியை தழுவியிள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Related articles

Recent articles

spot_img