14 வயது சிறுமியை மணந்த எம்பி! பெண்கள் அமைப்பு புகார்!

Published:

mavulana-salakuthin-1
mavulana-salakuthin-1

பாகிஸ்தான் நாடாளுமன்ற எம்பி மவுலானா சலாஹுதின் அயூப் 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். இவர் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவரும் ஆவார்.

பாகிஸ்தானில் 16 வயதுக்கும் குறைவான பெண்களை மணப்பது சட்டப்படி குற்றம் என இருக்கும் நிலையில், ஒரு எம்பியே சட்டத்தை மீறியுள்ளார்.

சித்ரல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு இந்த எம்பி ஜுகுர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளது.

பெண்கள் உரிமைகாகவும் நலனுக்காகவும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவு செய்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடக்கியுள்ளனர்.

இதை அடுத்து இந்த விவகாரம் உலகுக்குத் தெரியவந்துள்ளது. எம் பி திருமணம் செய்து கொண்ட சிறுமி பள்ளியில் பயின்று வருவதோடு, அவர் திருமண வயதையும் எட்டவில்லை. எனவே, பாகிஸ்தான் எம்பி மவுலானா சலாஹுதின் திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள் கூறுகின்றன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

திருமணம் குறித்து அந்தப் பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளதாகவும் முறையான திருமண விழா இன்னும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img