தடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்!

thadam - 2026

டையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி – அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால் கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் …

ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் …

எழில் , கவின் என இரு கதாபாத்திரத்தில் ஒரு மரு கூட வித்தியாசம் இல்லாமல் வந்தாலும் உடல் மொழியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார் அருண் விஜய் . குற்றம் 23 க்கு பிறகு அமைந்த நல்லதொரு வேடத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் . இரண்டு ஹீரோயின்களில் தன்யா அழகிலும் வித்யா கதாபாத்திரத்திலும் கவர்கிறார்கள் . சோனியா அகர்வாலுக்கு வலுவான கேரக்டெர் …

thadammovie - 2026

யோகி பாபு , ஜார்ஜ் மரியான் இருவரும் சீரியஸான படத்தில் தேவையான அளவு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . பெப்சி விஜயன் , ஸ்ம்ருதி போலீசாக பெர்ஃபெக்ட் . கோபிநாத்தின் ஒளிப்பதிவு , ஸ்ரீகாந்தின் எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பலம் . அருண்ராஜின் பின்னணி  இசை பெப் கொடுத்தாலும் மங்காத்தா வை நினைவு படுத்துகிறது …

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

வித்தியாசமான கதைக்களன் , விறுவிறுப்பான திரைக்கதை இரண்டும் தான் தடத்தை தூக்கி நிறுத்துகின்றன . எழில் , கவின் இருவரும் ஒரே மாதிரி இருப்பது குழப்பம் தந்தாலும் போக போக ஒன்ற முடிகிறது . இருவரில் கவின் சம்பந்தப்பட்ட சீன்கள் சிம்ப்ளி சூப்பர்ப் . இண்டெர்வெல் சஸ்பென்ஸ் முடிச்சோடு  விடப்படும் படம் அதன் பின்னர் சூடு பிடிக்கிறது . ஸ்டேஷனுக்குள் தொடர்ந்து சீன்கள் வந்தாலும் சலிப்பை தராததற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் …

Thadam tamil movie - 2026

இன்வெஸ்டிகேஷனில் சில லாஜிக் சொதப்பல்ஸ் உண்டு . டீட்ட்டைலாக சொன்னால் சுவாரசியம் கெட்டுப்போகும் . உதாரணத்திற்கு சொன்னால் போர்ஸ் ஏரியாவில் ஒரு கொலை நடக்கிறது . தெருக்கு தெரு சிசிடிவி இருக்கும் போது பெரிய ஏரியாவில் இல்லாமலா போகும் ? அவ்வளவு மழையிலும் ரத்தக்கறை காயாமல் இருப்பது எப்படி ? சில சில கேள்விகளை தடம்  எழுப்பினாலும் படம் போகிற போக்கில் அதை யோசிக்க விடாமல் செய்வது புத்திசாலித்தனம் . பேட்ட , விஸ்வாசம் கமர்ஷியல் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் தடம்வியாபாரத்தையும் தாண்டி நிச்சயம் இந்த வருடம் தடம் பதிக்கும் …

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ரேட்டிங்க் : 3.5 * / 5 * 
ஸ்கோர் கார்ட் : 45

வாங்க ப்ளாக்கலாம் அனந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories