எச்சரிக்கை! இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு! 

“மசூத் அசார் மரணத்தில் மர்மம் உள்ளது. நீதி விசாரணை வேண்டும் ” என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பேரணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதனிடையே, மசூத் அசார் மகனே வருக! மகத்தான ஆதரவு தருக!! என்று திராவிடக் கட்சிகள் தமிழகம் எங்கும் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மசூத் அசார் தம்பிகள் நாங்கள் – மாற்றான் தோட்டத்து மல்லிக்கை மொட்டுகள் நாங்கள் என்ற முழக்கங்கள் கூறி மசூத் அசாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டனர்.

மேலும், ஜெகாஸ் – உக்காஸ் நாட்டில் கி.மு ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு தேநீர் விடுதியில் சந்தித்தபோது மசூத் அசாரின் முன்னோர்கள் எங்கள் முன்னோருடன் வர்த்தக குடும்ப உறவுகள் வைத்திருந்தனர்  என்று உண்மை வரலாறை உரக்கச் சொல்லி, மசூத்தின் மர்ம மரணத்திற்குக் காரணம் வேதாந்தா கம்பெனி என்று ஒப்பாரி வைத்தார் ஒருவர்.இன்னொருவர், சனாதனம் இருப்பதால் தான் மசூத் அசார் மர்ம கொலை நடந்தது என்று உள்ளக்குமுறலுடன் ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில், மசூத் அசார் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்று உலக தேர்தலை மையமாக வைத்து நான் திட்டம் வகுத்த வேளையில் இடி போல் இதயத்தைத் தாக்கியது இவரது மரணம் என்று இரங்கல் தீர்மானத்தை வாசித்தார் ஒருவர்.

மசூத் அசாரும் நானும் பாசறையில் துப்பாக்கி சுடும் போது ஏகே 840 ரகம் பற்றி எனக்கு அவர் தான் சொல்லிக் கொடுத்தார் என்று சிரித்துக் கொண்டே இரங்கல் தீர்மானம் வாசித்தார் ஜெபஸ்டின் ஜீமான்.

இதனிடையே, மசூத் அசார் நலமாக உள்ளார் என்றும், தவறான தகவல் பரப்பப் பட்டு வருவதாகவும், அவர் நேற்றுதான் 2 இட்லி 4 இடியாப்பம் சாப்பிட்டார் என்றும் இந்தக் கூட்டமே தவறானது என்றும் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

– கருத்து: ராம. ரவிக்குமார்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...