தயாராகிறது மணிரத்னத்தின் கனவுப் படம்… பொன்னியின் செல்வன்! நடிப்பவர்கள் யார் தெரியுமா?

Published:

ponniyin selvan - 2026

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்கள் ஏற்கவுள்ள கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுத் திரைப்படமாக் அமைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் தற்போது அவர் இறங்கி ஓரளவிற்கு என்னென்ன கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் ஏற்க உள்ளார்கள் எனும் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, நடிகர் விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), ஜெயம் ரவி (அருள்மொழி வர்மன்), கார்த்தி (வல்லவராயன் வந்தியத்தேவன்), போலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (சுந்தர சோழர்), ஐஸ்வர்யா ராய் (நந்தினி), கீர்த்தி சுரேஷ் (குந்தவை நாச்சியார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபு நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்தப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் எப்படி இந்த வேடங்களுக்கு பொருந்துகிறார்கள் என்ற கருத்துக் கேட்பும் சமூக ஊடகங்களில் நடைபெற்றுவருகிறது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

சிலர் கருத்துக் கேட்பு போன்று தங்கள் பக்கங்களில் கேட்டு வருகிறார்கள். இதனிடையே, அமிதாப் நடிப்பது சந்தேகம்தான் என்றும் நயன்தாரா ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடும் என்றும் அடுத்த கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related articles

Recent articles

spot_img