ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகிறது. காற்றின் மொழி படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ளப்படம்.
சூர்யா நடித்த படங்கள் சமீபகாலமாக குறித்த காலத்தில் வெளியிடப்படாமல் இழுத்துக் கொண்டே போகின்றன. அதனால் திட்டமிட்டபடி அவரது படங்கள் திரைக்கு வருவதில்லை.
இந்நிலையில் ஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ படமும் விரைவில் வெளியாக உள்ளது.இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் ‘மொட்டை’ ராஜேந்திரன், யோகி பாபு, ஆனந்த் ராஜ், மன்சூரலிகான், ஜெகன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டநிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘ஜாக்பாட்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்று வழங்கியிருக்கிறார்கள். இந்த படத்தை ‘சக்தி பிலிம் பேக்டரி’ என்ற திரைப்பட விநியோக நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது.’ஜாக்பாட்’ படத்தை சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது
தமிழகத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தை ‘சக்தி பிலிம் பேக்டரி’ வெளியிட்டது. அப்படத்தை வெளியிட்டவர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்ட வகையில் அதை திருப்பிக்கேட்டு ‘சக்தி பிலிம் பேக்டரி’க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் விநியோகஸ்தர்கள். இதனால் ஜாக்பாட் படம் வெளியிடும் நேரத்தில் சிக்கல் வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.


