ரஷ்ய காதலரை திருமணம் செய்த பின்னர் படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார் நடிகை ஸ்ரேயா.அவர் நடித்து முடித்துள்ள நரகாசூரன் படம் வெளிவராமல் சிக்கல் மாட்டியிருக்கிறது.
விமலுக்கு ஜோடியாக சண்டகாரி தி பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.மதுர, சாக்லட் படங்களை இயக்கிய மாதேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இது மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன், தேவேந்தர் சிங் கில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அம்ரீஷ் இசையமைக்கிறார். பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.”வித்தியாசமான ஆக்ஷன் காமெடி படம். பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது. தற்போது கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்கிறார் இயக்குனர் மாதேஷ்.


