அரசியல் வசனம் அறவே கூடாது ! மித்ரன் இயக்குனருக்கு பிரேமலதா விஜயகாந்த் கட்டளை !

சினி நியூஸ் சினிமா

shanmugapantiyan - 2026விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன்  இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த ஜி.பூபாலன் என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன், எமோஷன் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு ‘மித்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் துடிப்பு மிக்க ஒரு இளம் போலீஸ் அதிகாரி மித்ரன்,அந்த கதாபாத்திரத்தில் தான்  நடிக்கிறார் சண்முக பாண்டியன். caption - 2026இதை உறுதி செய்வதுபோல் மித்ரன் என்ற தலைப்புக்கு கீழே ‘தி காப்’ என்ற டேக்லைனும் இடம் பெற்றுள்ளது. விஜயகாந்த் ஏராளமான போலீஸ் கேரக்டர்களில் நடித்துள்ளார்.இப்போது அவரையைப் போலவே சண்முகபாண்டியனும் போலீஸ் வேடமேற்று நடித்து வருகிறார்.

‘மித்ரன்’ படத்தை படத்தை ‘ஜி எண்டர்டெயினர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ரோனிகா சிங் நடிக்கிறார். சண்முக பாண்டியனின் அம்மாவாக அர்ச்சனா நடிக்கிறார்.

மித்ரன் படத்தில் அரசியல் வசனம் தப்பித் தவறி கூட இருக்கக் கூடாது என்று இயக்குநர் பூபாலனிடம், விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கண்டிப்பாக கட்டளையிட்டிருக்கிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.