
இஸ்ரோ தனது நூறாவது ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
- இஸ்ரோ தனது முதல் ராக்கெட்டை கடந்த 1979ம் ஆண்டு ஆக.,10ம் தேதி விண்ணில் ஏவியது.
- இதுவரை 548 ராக்கெட்டுகள் இந்தியா சார்பில் விண்ணில் பாய்ந்துள்ளன; இதுவரை 6 தலைமுறை ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
- சந்திரயான், ஆதித்யா போன்ற திட்டங்கள் இஸ்ரோவின் முக்கிய சாதனைகளுள் ஒன்று.
- GSLV F-15 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட NVS 02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
- இந்தியா இதுவரை 548 செயற்கைக்கோள்களை வெற்றிகரமான விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது – இஸ்ரோ தலைவர் நாராயணன்
இந்தியாவின் நூறாவது செயற்கை கோள் ஏவு வாகனமான GSLV F15, NVS-02 செயற்கை கோளை சுமந்து கொண்டு இன்று காலை 6:23 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திப்பட்டது என அதன் தலைவர் பெருமதிப்புடன் அறிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இவ்வாண்டின் முதல் செயற்கைக்கோளாக, ஜன.29 இன்று, நூறாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கிறார்கள்.
பொதுவாக இரண்டு விதமான ஏவு வாகனம் பயன்படுத்தி வருகிறோம். ஒன்று PSLV, மற்றொன்று GSLV. இதில் PSLV என்பது போலார் சாட்டிலைட் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.அதுபோலவே GSLV என்பது ஜியோ சின்க்கரனைஸ் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும். இதில் இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சின் பொருத்தப்பட்ட 11வது ஏவு வாகனம் ஆகும்.
பி.எஸ்.எல்.வி துருவத்தில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.
ஜி.எஸ்.எல்.வி என்பது புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.
இப்போது ஏவப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள் மிக முக்கியமான இரண்டு விதமான பயன்பாடுகளை கொண்டுள்ளது என்கிறார்கள். அதில் பிரதானமானது NaviC . நமது இந்தியாவிற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட gps போன்ற ஒன்று என்பதாக புரிந்து கொள்ள பாருங்கள். தற்சமயம் புவியீர்ப்பு விசையின் வட துருவம் நகர்ந்து கொண்டே வரும் சூழலில் அதனால் துல்லியமான மற்றும் சரியான ஸ்டாண்டர்ட் பொஸிஷனிங் சிஸ்டம் SPS வழங்க இது அவசியம் ஆகுகிறது. தற்போது உலக அளவில் இயங்கும் 40 m துல்லியம் திறனை தாண்டி இது 20m துல்லியத்திறன் கொண்டு வந்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
நிச்சயம் இது ஒரு மைல் கல் சாதனையாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் இது இந்தியாவின் நிலப்பரப்பை தாண்டி கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் விதத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள்.
இங்கு NaviC என்பது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.
நேரம் காலம் துல்லியமாக தர அணு கடிகாரம் ஒன்று இதனுள் அடங்கியிருக்கிறது. மொத்தம் இதனுடன் சேர்த்து ஆறு செயற்கை கோள் இந்த வரிசையில் வருகிறது. ஏற்கனவே ஐந்து விண்வெளியில் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இயங்கி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாண்டில் வெற்றிகரமாக கணக்கை துவக்கிவைத்து இருக்கிறார்கள். இது மென்மேலும் வளரும் என்பதும் நிச்சயம்.