அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி ! நன்றி சொன்ன அஜித் !

சினி நியூஸ் சினிமா

ajith nkp 2 e1565692710451 - 2026எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.rajini - 2026திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள்கூட வெளிப்படையாக படத்தை பாராட்டியுள்ளனர். இதனால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.ajithrajini - 2026இந்நிலையில் நடிகர் ரஜினி நேர்கொண்ட பார்வை படத்தை நேற்று பார்த்ததார். படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து ரஜினிக்கு பிடித்திருந்ததாம். மேலும் இந்த படத்தில் அஜித்தின் நடிப்பையும் ரஜினி வெகுவாக ரசித்துள்ளார்.

 

நல்ல படங்களைப் பார்த்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை போனில் அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அந்தவகையில், நேர்கொண்ட பார்வை படம் தொடர்பாக அஜித்துக்கு போன் செய்து பேசிய ரஜினி, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். பதிலுக்கு அஜித்தும் ரஜினிக்கு நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.