காஷ்மீர் தொடர்பாக தங்கள் அஜெண்டாவை சரிவர செய்வார்கள் என்று, அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னிறுத்தி பாகிஸ்தான் சவால் விடுத்து வருகிறது.
இந்திய அரசு உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய நிலையில், பயங்கரவாத நாடான பாகிஸ்தான் இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது பிரிவை ரத்து செய்ததன் எதிர்வினையாக காஷ்மீரை மேலும் நிலையற்ற தன்மைக்கு தள்ளிவிடுவதற்காக, இந்திய அரசியல் கட்சியினர் சிலர் மற்றும் இந்திய அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றிவிடலாம் என்று நம்புகிறது!
பாகிஸ்தான் செய்தி சேனலான ஜியோ டிவியில் ஒரு விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் அரசியல்வாதியும் ஊடகவியலாளருமான முஷாஹித் உசேன், பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்காக அருந்ததி ராய், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பாகிஸ்தானின் “அனுதாபிகள்” இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து நாங்கள் செயலை எதிர்பார்க்கிறோம் என்றார்.
17 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், காஷ்மீரில் உள்ளவர்களின் பிரச்னைகள் எப்படி முடிவுக்கு வரும் என்று செய்தி தொகுப்பாளர் கேட்டபோது, ஹுசைன் இந்தியா ஒரு பெரிய நாடு; எல்லோரும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
“காஷ்மீர் பிரச்னையை நாங்கள் தீவிரமாகவும் நீடித்த கால அளவிலும் அணுக வேண்டும். இது ஒரு நீண்ட போர். இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவில் இருந்து பலர்… அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தலித் கட்சிகள் போன்றவை பாகிஸ்தானின் அனுதாபிகளாக உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியுடன் இல்லை என்றார் ஹுசைன்!
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை நீக்கி, இந்தியா ஒரு சரித்திர நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.