கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி
கொரோனாவை எதிர்க்க அரசுடன் இணைந்து தல அஜித்தின் தக்க்ஷா குழு இணைந்து செயல்பட்டு வருகிறது.
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.
அதேபோல் மருத்துவர்கள், காவல்துறையிர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதால் வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிள் தெளிக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கிருமி நாசினிகளை ட்ரோன் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கல்லூரி மாணவர்கள் பெருமளவு அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். அப்படி உதவி செய்யும் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நடிகர் அஜித் முன்னதாகவே பயிற்சி அளித்துள்ளார்.
நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய டீம் தக்க்ஷா தான் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரசுடன் இணைந்து செய்து வருகிறது. இந்த டீம் தக்க்ஷா ஆனது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யுஏவி சவால்களை பங்கேற்று கடந்த காலங்களில் பல விருதுகளை பெற்றுள்ளது.
மேலும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல விஷயங்களில் சிறந்து விளங்குபவர்.
இந்நிலையில் டிம் தக்ஷா எனும் டிரான் வடிவமைப்பு குழுவினர்களில் ஒருவராக உள்ளவர், தற்போது அவருடன் டிம் தக்ஷாவில் பணியாற்றிய ஒருவர் நடிகர் அஜித் குறித்து கூறியுள்ளார்.
அதில் “அஜித் டிம் தக்ஷாவில் ஒருவர், ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியில் ஜெயிக்க அஜித் நிறைய உதவியுள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த Drone Operator என கூறியுள்ளார்.