அந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகினார்.
இயக்குனர் பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில், சிவாஜியின் உறவுக்கார இளைஞனாக நடித்து, அந்த நிலாவைத் தான் கையில பிடிச்சேன்… பாடல் காட்சி யில் இடம்பெற்ற தீபன், 35 ஆண்டு களுக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ளது பற்றி: எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி அம்மாவின் தம்பி தான் எங்கப்பா. என்னுடன் பிறந்தது, ஆறு சகோதரிகள். என்னை நல்ல படியாக ஆளாக்க வேண்டும் என, அப்பா விரும்பினார்.குடும்பத்தினரின் வற்புறுத்தலால், குடும்ப தொழிலை கவனிக்க வேண்டி இருந்ததால், சினிமா படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன்.
நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து மாதிரி தான். மாமா, எம்.ஜி. ஆருடன் சில நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நாள், என்னை பார்த்த, இயக்குனர் பாரதிராஜா, என்னை நடிக்க வைக்க நினைத்து, மாமாவின் வீட்டிற்கே வந்து, அனுமதி கேட்டார். மாமா,எம்.ஜி.ஆரும் அனுமதி அளித்து விட, முதல் மரியாதை படத்தில் நடித்தேன்.அதற்கு முன், நடிப்பு என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது. பள்ளி நாடகங்களில் கூட நடித்ததில்லை. குருட்டு தைரியத்தில் நடிக்க துவங்கி விட்டேன். எப்படியோ, அந்த படம், சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, என்னை எவ்வளவோ உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது.
எனினும், தொடர்ந்து படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.அந்த படத்தில் நடித்தது, இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. கிராமத்து கேரக்டர் என்பதால், படப்பிடிப்புக்கு சென்றதும், முகத்தில் கறுப்பு மையை பூசி, என்னை கறுப்பாக்கி விடுவர். சிவாஜியுடன் ஒரு சில காட்சிகளில் தான் நடித்தேன். இளையராஜாவின் அருமையான பாடல்கள், பிரமாதமான கதை என, முதல் மரியாதை எனக்கு, நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது.
இப்பவும், தமிழில், ஏதாவது ஒரு, டிவியில், முதல் மரியாதை படம் அல்லது அந்தப் படத்தின் பாடல்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க, மகிழ்ச்சியாக இருக்கும்.கஞ்சரப்பாலம் என்ற தெலுங்கு படத்தை தமிழில், இயக்குனர் ஹேமாம்பர் ஜோஷி எடுக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகினார்.
நடித்து, 35 ஆண்டுகள் ஆகி விட்டன; நடிப்பு மறந்து விட்டது… என, என்னன்னவோ சொல்லிப் பார்த்தேன். நடித்தே ஆக வேண்டும் என கூறி விட்டார்.மூன்று மாதங்களாக நடிப்பு பயிற்சி அளித்து, நடிக்க வைக்கின்றனர். நான்கு வெவ்வேறு வயதுள்ளவர்களை சுற்றி நடக்கும் அன்பான அனுபவங்கள் தான், அந்தப் படத்தின் கதை.சோனியா கிரி என்ற, கேரளாவின் பிரபல நடிகை தான் என் ஜோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியவர், ராஜினாமா செய்து, என் ஜோடியாக நடிக்கிறார் என்றார்.