நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இருக்கின்றனர். இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் வீட்டில் முடக்கப்பட்டிருக்கின்றனர்.நாடு முழுவதும் வீதிகள் தோறும், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.
அரசின் உள்ளாட்சித் துறை இதில் தீவிரமாக இருக்கிறது. சில சமூக அமைப்புகளும் இந்த கிருமி நாசினி மூலம் நோய்த் தொற்று இருக்காமல் இருக்க பணியாற்றி வருகின்றன.அந்த வகையில், தன்னுடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பை கிராமத்துக்குச் சென்ற நடிகர் விமல், ஊர் இளைஞர்களோடு சேர்ந்து, ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் ஒரு இயந்திரத்தை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு, கிருமி நாசினி தெளித்து வருகிறார். கூடவே, கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.இவரின் இந்த முயற்சியை, பன்னாங்கொம்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.