இதனை கடந்தால் பெரிய பாதிப்பு இல்லை! காயத்ரி ரகுராம்!

சினி நியூஸ்

வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.

ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் வெளியே சுற்றுவதாக நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

0076ac9a14848fddb2d4aeb7f2d1c4a8 - 2026

நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பை தடுக்க பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சுடு தண்ணீர் குடித்தால் நல்லது என்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் நிறைய இளைஞர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்ற குருட்டு தைரியத்தில் வெளியே போகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.

e80d88cb579b2f04fe04f9ec82506fc4 - 2026

நிறைய பேர் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்து இருப்பார்கள். அவர்கள் மீது வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தொலைவை கடைபிடித்தால்தான் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்கு நான் சொல்வது அவர்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள். யாருக்காவது அறிகுறி இருந்தால் அடுத்த வாரம்தான் தெரியும், அதையும் கடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.