ஊழல் செய்த அரசியல்வாதியை போல் அவர் பணம் கொடுக்கவில்லை.
நடுவிரலை காண்பித்த நடிகை ஸ்ரீரெட்டிக்கு நெட்டிசன்கள் செம டோஸ் விட்டுள்ளனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பிரளயத்தை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி.
தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி. அவ்வப்போது சக நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் வம்பிழுத்து வருகிறார். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மிகவும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அடிக்கடி கெட்ட வார்த்தைகளை பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி.
குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணை வச்சு செய்து வருகிறார். எந்த அளவுக்கு பவன் கல்யாணை மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு அவரை இழிவு படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டி ஃபேஸ் புக்கில் ஏதாவது ஒரு கருத்தை பதிவிடுகிறார் என்றாலே பலருக்கும் பிபி எகிறிவிடும். அப்படி இருக்கும் ஸ்ரீரெட்டியின் ஒவ்வொரு பதிவும்.
கடந்த சில நாட்களாய் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளத்தில் அதிகம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தொடர் உடலுறவு கொரோனா வைரஸை கொல்லும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அதோடு அது நிரூபிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறி அள்ளிவிட்டார். இதனால் அவரது பதிவை நீக்கியது ஃபேஸ்புக் நிர்வாகம்.
எப்போதும் செக்ஸ் குறித்து பச்சை பச்சையாக பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி. அதோடு படு மோசமனா போட்டோக்களை பதிவிட்டு அதற்கு கேவலமான கேப்ஷன்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.
அதாவது நடுவிரலை காண்பித்து போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கொதித்து போயுள்ளனர். நீங்கள் இதுபோன்ற கெட்ட வார்த்தை பேசினால் பிளாக் செய்து விடுவோம் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். பலர் நீங்கள் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் பலர் அவரது போட்டோவுக்கு ஏற்ப மோசமாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா நிவாரணத்துக்காக 4 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கும் நடிகர் பிரபாஸை புகழ்ந்திருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பிரபாஸ் டார்லிங்.. நம் முதல்வருக்கு உதவுவதற்கு நன்றி.. நீங்கள் பவன்கல்யாணை விட சிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவனமாக பேசுங்கள் ஸ்ரீரெட்டி. அவர் தனது படத்தின் மூலம் சம்பாதித்த அவரது சொந்த பணத்தை கொடுத்தள்ளார். ஊழல் செய்த அரசியல்வாதியை போல் அவர் பணம் கொடுக்கவில்லை. உங்களிடம் பணம் இருந்தால் நீங்களும் கொடுக்கலாம் இதுபோன்ற கமென்ட்களால் உங்கள் தரத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.