அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நண்பர்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரண நிதியாக 180 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்கள் பலரும் குறிப்பிட்ட தொகையை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சருக்கு அல்லது பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வரையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரண நிதியாக 180 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதுவரை வழங்கப்பட்ட நிதிகளில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.