தொண்டை வலி இருந்தால் டாக்டரை பாருங்கள்
அச்சுறுத்தும் கொரோனா பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திரைப்பட நட்சத்திரங்கள் பல்வேறு வகையான வீடியோக்கள், பேச்சுகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அவர் இந்த வீடியோவில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேசி அதற்கு பொருத்தமான தனது திரைப்படத்தின் காட்சிகளை இணைத்துள்ளார்.
இதனை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஷாருக்கான் இதுகுறித்து கூறியிருப்பதாவது:கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் டாக்டரை பாருங்கள். அடுத்தவர்களிடம் இருந்து தனித்திருங்கள். கூட்டமாகச் செல்லாதீர்கள். வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களையோ, உங்கள் முகத்தையோ தொட வேண்டாம்.
We must all do our bit and support the officials doing so much for us. #WarAgainstVirus @mybmc pic.twitter.com/TDLpVhtr1F
— Shah Rukh Khan (@iamsrk) March 20, 2020
வாகனங்களில் பயணிப்பதை தவிருங்கள். அடிக்கடி கைகளை கழுவுங்கள், உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமல், காய்ச்சல் இருந்தால், மாஸ்க் அணிந்து செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
InshaAllah #JantaCurfew will help against the spread of virus, though we may have to do this again. The clapping brought so much cheer. So a reminder of safeguards, with some cheer… Pls take it in the right spirit. To all relentlessly working today – Extremely Grateful. Thx! pic.twitter.com/2wfaXPlFVF
— Shah Rukh Khan (@iamsrk) March 22, 2020