என் நடிப்பு பிடித்திருந்தது. பிறகு டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள். அதிலும் என் லுக் ஓகே ஆனதால், தேர்வு செய்துள்ளனர்.
லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3.
இதில் இன்னொரு ஹீரோயினாக, கிளாமராக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி. இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார்.
இப்போது அவர் இந்தியில் அறிமுகமாகிறார். மும்பையில் இருந்துதான் ஒரு காலத்தில், தென்னிந்திய சினிமாவுக்கு ஹீரோயினை இறக்குமதி செய்வார்கள். இப்போது அப்படி இல்லை. தென்னிந்திய சினிமாவில் கலக்கிய காஜல் அகர்வால், இலியானா, தமன்னா ஆகியோர் அதற்கு பிறகு இந்திக்கு சென்றார்கள். அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகின்றன.
அந்த வரிசையில், மும்பையில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான, நடிகை நிக்கி தம்போலியும் இப்போது இந்திக்குச் செல்கிறார். ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர், நமஷி சக்கரவர்த்தி. இவர், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் ஆவார்
இதுபற்றி நிக்கி தம்போலி கூறும்போது, ‘எனது புகைப்படங்களையும் நான் நடித்துள்ள படங்களைப் பார்த்த இயக்குனர் ராஜேஷ் பஜாஜ், என்னை இந்தப் படத்தின் ஆடிஷனுக்கு அழைத்தார். சில வசனங்களைக் கொடுத்து நடிக்கச் சொன்னார். அதில் என் நடிப்பு பிடித்திருந்தது. பிறகு டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள்.
அதிலும் என் லுக் ஓகே ஆனதால், தேர்வு செய்துள்ளனர்.
இது ஜாலியான பொழுதுபோக்கு படம்தான். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பெண் கேரக்டர் எனக்கு. என்ஆர்ஐ ஆக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாமே படத்தில் இருக்கிறது. எனது பாடிலாங்குவேஜ், பேச்சுவழக்கு உள்ளிட்ட ஸ்டைல்களுக்காக வொர்க் ஷாப் நடக்க இருக்கிறது.
அதில் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறேன். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள படம் என்று தெரிவித்துள்ளார்.