சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.
சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருப்பது பற்றி பிரபல நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் தென்னிந்திய திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக, சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.
தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
அவ்வப்போது பகீர் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த விஷயம் குறித்து சில நடிகைகள் புகார் தெரிவித்து இருந்தாலும் முன்னணி ஹீரோயின்கள் யாரும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. அவர் நடித்துள்ள படம், சைலன்ஸ். இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், நடிகை அனுஷ்கா. அப்போது, வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றி அனுஷ்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அவர் கூறும்போது, அதை இல்லை என்று என்னால் சொல்ல முடியாது எனச் சொன்னார், அனுஷ்கா. அவர் மேலும் கூறும்போது, ஆனால், எனக்கு அப்படி எந்த அனுபவமும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் எப்போதும் வெளிப்படையாகவே இருந்திருக்கிறேன். இதுபோன்ற ஆதாயங்களை, பெண்களிடம் இருந்து சினிமா துறையினர் எதிர்பார்ப்பதும் தவறானது. தவிர்க்கப்பட வேண்டும்.
எளிதான வழியில் சென்று குறைந்த புகழோடு இருக்க வேண்டுமா? கடினமாக உழைத்து நீண்ட காலம் சினிமாவில் நிலைக்க வேண்டுமா என்பதை அந்தந்த நடிகைகள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை இந்த விஷயம் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த நடிகை அனுஷ்கா இப்போது தெரிவித்துள்ள இந்த கருத்து தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.