வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஜோதிகா நடிப்பில் வெளியாக இருந்த பொன்மகள் வந்தால் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2டி நிறுவனம் தயாரித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மார்ச் 31ம் தேதி
வரை நிறுத்தப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் அண்ணன் தம்பிகளான சூர்யா,கார்த்தி ஆகியோருக்குத் தனி இடமுண்டு. இருவரும் மற்ற ஹீரோக்களைப் போல
வழக்கமான மசாலாப் படங்களில் நடிக்காமல் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடிப்பது வழக்கம். கார்த்தி ‘பருத்தி வீரன்’ படத்தில் நடிக்க வந்த பிறகு, அண்ணன் சூர்யாவுடன் எப்போது இணைந்து நடிப்பார் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்கள்.இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர்களிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். சூர்யா, கார்த்தி இருவரும் பெரும்பாலும் அவர்களது உறவினர்கள் தயாரிக்கும் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார்கள்.
அப்படியிருக்கையில் வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதிப்பார்களா என்பது தெரியவில்லை. அப்படி நடிக்க சம்மதித்தால் இந்த ரீமேக் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிடலாம்.