
பதிவிடும் டுவீட்களில் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர்களையும் டேக் செய்து விடுகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழலை பயன்படுத்தி, டி.ஆர்.பியை உயர்த்துவற்காக புதிய படங்களை ஒளிபரப்பி வருகின்றன தமிழ் தொலைக்காட்சிகள். விஜய் மற்றும் அஜித் படங்கள் திரையிடும் போதெல்லாம் அவர்களுடைய ரசிகர்கள், சம்பந்தப்பட்ட படத்தை ஹேஷ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்டாக்குகின்றனர்.
இதில் இரண்டு தரப்புக்கும் இடையே போட்டியும், மோதலும் நடைபெற்று வருகிறது. ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொள்கின்றனர். அவர்கள் பதிவிடும் டுவீட்களில் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர்களையும் டேக் செய்து விடுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து டுவீட் செய்துள்ள காமெடி நடிகர் விவேக், “நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறைப் பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறிச் செய்தால் ப்ளாக் ஆகும். நேர்மறைப் பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்”, என எச்சரித்துள்ளார்.
நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். Stay home stay safe!
— Vivekh actor (@Actor_Vivek) April 13, 2020