இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் இருந்து கணவரின் புகைப்படத்தை நீக்கிய ஸ்வாதி!

Published:

திருமணப் புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை முதலில் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட ஸ்வாதி..

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவனம் பெற்றார் நடிகை ஸ்வாதி. 2005 முதல் திரையுலகில் நடித்து வரும் ஸ்வாதி – தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

0b9497233c5068dacde0693e9f204a5b - 2026

2018-ல் விமானி விகாஸ் வாசு என்கிறவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.

தன்னுடைய திருமணப் புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை முதலில் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட 33 வயது ஸ்வாதி திடீரென அப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் கணவரைப் பிரியவுள்ளாரா ஸ்வாதி என்கிற கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டார்கள். இதையடுத்து தன்னுடைய நடவடிக்கையால் நேர்ந்த குழப்பத்துக்கு அவர் மறைமுகமாகப் பதில் அளித்துள்ளார்.

e1ee849da7757df8755688edd3227b93 - 2026

கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் மற்றவர்கள் யாரும் பார்த்திடாதபடி மறைத்து வைத்துள்ளார். அவருடைய இன்ஸ்டகிராம் ஆர்கீவ்ஸ் பகுதியில் உள்ள புகைப்படங்களில் கணவருடனான புகைப்படங்களும் உள்ளன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

7a5656fb9b8114128b6a24a4048097df - 2026

ஆனால் அவற்றை ஸ்வாதியால் மட்டுமே காணமுடியும். இதனை ஒரு விடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு விளக்கம் அளித்ததோடு, குடும்ப வாழ்க்கை தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img