ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி,பிளாரன்ட் பெராரா, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி, மதுரை புலி, காளிச்சரண், ஸ்டன்ட் சர்வியானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – லால்பாபு இசை – தாஜ்நூர் பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி கலை – ராம் ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம் எடிட்டிங் – ராஜ்கீர்த்தி தயாரிப்பு நிர்வாகம் – சாமிநாதன், காளீஸ்வரன் தயாரிப்பு – ராமாபுரம் ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன். இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்திற்காக அமைச்சர் காத்துவாயனாக நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைகிறார். மனோபாலா நடத்தி வைக்கும் திருமண ஜோடிகளில் அப்புகுட்டி – வர்ஷா ஜோடியும் ஒன்று. அமைச்சர் தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அப்புகுட்டி – வர்ஷா கழுத்தில் தாலிகட்ட அதை பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ஏன்? எதற்கு என்பதற்கான விளக்கம் திரையில் என்றார் இயக்குனர் பாரதிமோகன். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை திருச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார்.
பாரதி மோகன் இயக்கத்தில் “எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது“
Popular Categories



